மன்னார் நகர சபையினால் உள்ளூராட்சி வாரத்தையொட்டி சிரமதான பணிகள் முன்னெடுப்பு
மன்னார் நகர சபையினால் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (16) காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வளமான நாடும் அழகான வாழ்க்கையும் 'மறுமலர்ச்சி நகரம் என்ற தொனிப்பொருளில் மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையில் இன்று காலை 7.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.
மேலும் மன்னார் நகர சபையின் செயலாளர்,உத்தியோகத்தர்கள்,இராணுவத்தினர்,மன்னார் நகர சபையின் சுற்றிகரிப்பு பணியாளர்கள் ஆகி கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (16) அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.இராணுவம் மற்றும் கடற்படை இணைந்து குறித்த சிரமதான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:
Post a Comment