நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம்..!
இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் எனவும் அந்த நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த முகமட் சம்சுதீன் ஆதில் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் எட்டு வயதிலேயே கொழும்பு சென்று அங்கு கொழும்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம்..!
Reviewed by Author
on
September 04, 2021
Rating:

No comments:
Post a Comment