கிளிநொச்சி பரந்தனில் ஒரு பிள்ளையின் தந்தை வெட்டிக் கொலை
சம்பவ இடத்திற்கு இன்று மதியம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவ பாலசுப்பிரமணியம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன் நிலையில் சடலம் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டதையடுத்து உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பரந்தன் சிவபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை எனவும் இவர் குடும்பத்தில் இருந்து நீண்ட காலமாக பிரிந்து வாழ்வதாகவும் அவரது மனைவி வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி பரந்தனில் ஒரு பிள்ளையின் தந்தை வெட்டிக் கொலை
Reviewed by Author
on
November 17, 2021
Rating:
No comments:
Post a Comment