அண்மைய செய்திகள்

recent
-

60 மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் உயர்ந்துள்ளதாகவும், அவை விலை கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

 இந்நிலையில், 60 மருந்துகளின் 131 வகைகளின் விலைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கான ஆகக்கூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகளில் எதனையும் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்பனை செய்வது சட்டவிரோத மானது என அமைச்சு தெரிவித்துள்ளது. ஏதாவது ஓரிடத்தில் கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால் complaints@nmra.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக அறிவிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் வைத்தியர் ஆர்.எம.எஸ்.கே. ரத்நாயக்க தெரிவித்தார். 

இதேவேளை, மருத்துகளின் விலைகள் 100%, 200 % இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும், டொலரின் பெறுமதிக்கமைய, ஓகஸ்ட் மாதம் மருந்துகளின் விலைகளை 9 சதவீதத்தால் மாத்திரம் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் முறையான விற்பனை விலையை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு வெளியிட் டுள்ளது.

60 மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் Reviewed by Author on November 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.