அண்மைய செய்திகள்

recent
-

காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளின் ஏல விற்பனை செய்யப்படும் பணி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகள் இன்று சற்றுமுன் ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் ஆரம்பமானது. இலங்கையின் 5 துறைமுகப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப் படகுகள் இன்று முதல் 5 தினங்களிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. 

இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ள படகுகளை கடந்த ஒருவாரமாக 50ற்கும் அதிகமனோர் பார்வையிட்டனர். இவ்வாறு பார்வையிட்ட படகுகளில் காரைநகரில் உள்ள படகுகளே இன்று ஏலம்விடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப் பணி இன்று மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது.


காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளின் ஏல விற்பனை செய்யப்படும் பணி ஆரம்பம்! Reviewed by Author on February 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.