அண்மைய செய்திகள்

recent
-

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14வது பொதுப்பட்டமளிப்பு விழா இன்று ஆரம்பம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14வது பொதுப்பட்டமளிப்பு விழா இன்று (07) பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இப்பட்டமளிப்பு நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை 10ஆம் திகதி வரை 4 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் இன்றைய தினம் (07) பிரயோக விஞ்ஞானங்கள் பொறியியல் பீடத்தினைச் சேர்ந்த 475 மாணவர்கள் தங்களது பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். 

 கொட்டும் மழையிலும் தங்களது பட்டங்களைப் பெற இம்மாணவர்கள் வருகைதந்தமையானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. முதல்நாள் அமர்வான இன்றைய தினம் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இங்கு இணைய வழி மூலமாக உரையாற்றினார். 08 அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்த பொது பட்டமளிப்பு விழாவில் மொத்தமாக 2,621 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர். 


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14வது பொதுப்பட்டமளிப்பு விழா இன்று ஆரம்பம் -நாளை (08) இடம்பெறவுள்ள 2ஆம் அமர்வில் கலைப் பீடத்தினைச்சேர்ந்த 219 மாணவர்களும், 3ஆம் அமர்வில் கலைப்பீடத்தினைச் சேர்ந்த 348 மாணவர்களும், 4ஆம் அமர்வில் இஸ்லாமியக் கற்கைகள் அறபு மொழி பீடத்தினைச் சேர்ந்த 329 மாணவர்களும், 5ஆம் அமர்வில் இஸ்லாமியக் கற்கைகள் அறபு மொழி பீடத்தினைச் சேர்ந்த 313 மாணவர்களும், 6ஆம் அமர்வில் முகாமைத்துவ, வர்த்தக பீடத்தினைச் சேரந்த 277 மாணவர்களும், 7ஆம் அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தினைச் சேரந்த 348 மாணவர்களும், 8ஆம் அமர்வில் கலை, கலாச்சார பீட மற்றும் முகாமைத்துவ வர்த்தக பீடங்களின் 312 வெளிவாரி மாணவர்களும் தமது பட்டங்களைப் பெறவுள்ளனர். அத்துடன் இந்த பட்டமளிப்பு விழாவில் 04 பேர் முது தத்துவமானிப் பட்டங்களையும், 23 பேர் வியாபார நிருவாக முதுமானிப் பட்டங்களையும், 02 பேர் முகாமைத்துவத்தில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமாவினையும், இருவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டங்களும் வழங்கப்படவுள்ளன. 

 இதில் பேராசிரியர் எஸ். தில்லைநாதன், தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளர் ஜௌபர் சாதிக் ஆகியோர் கௌரவ கலாநிதிப்பட்டங்களைப் பெறவுள்ளனர். மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் நாளைய தினம் (08) உயர் நீதிமன்ற நீதிபதி திலீப் நவாஸ், மூன்றாவது நாள் அமர்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, நான்காவது நாள் அமர்வில் ருஹுனு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் காமினி சேனாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டு பிரதான உரையாற்றவுள்ளனர். இந்த பொதுப் பட்டமளிப்பு விழாவானது எதிர்வரும் 10ஆம் திகதி நிறைவு பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்






தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14வது பொதுப்பட்டமளிப்பு விழா இன்று ஆரம்பம் Reviewed by Author on February 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.