பசுமையான நகர திட்டத்தின் கீழ் மன்னார் நகர பகுதியில் தரம் பிரித்து கழிவு பொருட்களை சேகரிக்கும் கழிவுத் தொட்டிகள் அமைப்பு
கடதாசி மற்றும் காட்போட் வகையான கழிவு பொருட்களை தனியாகவும், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவு பொருட்களை தனியாகவும், உணவு பொருட்கள் மற்றும் உக்கக்கூடிய பொருட்களை தனியாகவும் சேகரிக்கும் வகையில் மூன்று கழிவுத் தொட்டிகள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கழிவுப் பொருட்களை தரம் பிரித்து குறித்த தொட்டிகளில் போட வேண்டும்.
ஆரம்ப நிகழ்வு இன்று வியாழக்கிழமை (24) காலை 9.30 மணியளவில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றது.
-இதன் போது நகர சபையின் செயலாளர்,உறுப்பினர்கள் மற்றும் நகர சபை பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
எனவே மக்கள் மன்னார் நகர சுத்தமாக வைத்திருப்பதற்கு கழிவுப் பொருட்களை வீதியோரங்களில் போடாது அமைக்கப்பட்டுள்ள கழிவுத் தொட்டிகளில் தரம் பிரித்து கொட்ட வேண்டும் என மக்களிடம் நகர சபையின் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
பசுமையான நகர திட்டத்தின் கீழ் மன்னார் நகர பகுதியில் தரம் பிரித்து கழிவு பொருட்களை சேகரிக்கும் கழிவுத் தொட்டிகள் அமைப்பு
Reviewed by Author
on
February 24, 2022
Rating:

No comments:
Post a Comment