மன்னாரில் அரிய வகை கடலாமைகள் 5 வீடு ஒன்றின் குளியல் அறையில் இருந்து மீட்பு
இதன் போது குறித்த வீட்டின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அரிய வகை கடல் ஆமைகள் 5 பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
குறித்த ஆமைகள் அரிய வகை பேராமை இனத்தை சேர்ந்தவை என்பதுடன் ஒவ்வொரு ஆமையும் சுமார் 100 கிலோ எடை கொண்டது என பொலிஸார் தெரிவித்தனர்.
-எனினும் குறித்த வீட்டில் சந்தேக நபர்கள் எவரும் இருக்கவில்லை.
குறித்த கடலாமைகள் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு கடலில் விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-சந்தேக நபர்கள் குறித்து மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னாரில் அரிய வகை கடலாமைகள் 5 வீடு ஒன்றின் குளியல் அறையில் இருந்து மீட்பு
Reviewed by Author
on
February 24, 2022
Rating:

No comments:
Post a Comment