புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மாங்குளம் பொலிசாரால் நால்வர் கைது! 6 ம் திகதிவரை விளக்கமறியல்
 கைது செய்யப்பட்ட 6 பேரும் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்களை நேற்று (23) முல்லைத்தீவு மாங்குளம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய  போது அவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆதரவோடு தொடர்ச்சியாக புதையல் தோண்டும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன 
 பல்வேறு தரப்பினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வருகை தந்து புதையல் தோண்டும்  நடவடிக்கையில் ஈடுபட்டு  வருகின்றனர்
அந்த வகையில் பனிக்கன்குளம் பகுதியில்  புதையல் அகழ்வில் ஈடுபட்டவர்கள்  6 பேரில்  பாணந்துற, மொரட்டுவ ,கிளிநொச்சி ,மாங்குளம் உள்ளிடட பகுதிகளை சேர்ந்தவர்கள்  உள்ளடங்குவதாக பொலி சார் தெரிவிக்கின்றனர்
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சண்முகம் தவசீலன்
புதையல் தோண்டிய குற்றச்சாட்டில்  மாங்குளம் பொலிசாரால்  நால்வர் கைது! 6 ம் திகதிவரை விளக்கமறியல்
 Reviewed by Author
        on 
        
March 24, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 24, 2022
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
March 24, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 24, 2022
 
        Rating: 







 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment