முள்ளிவாய்க்காலில் பசிபோக்கிய முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி தேராவில் பகுதியில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது!
முள்ளிவாய்க்காலில் பசிபோக்கிய முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி தேராவில் பகுதியில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது! இறுதிப்போரின் போது பல மக்களளுக்கு பசிபோக்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படுவது 2009 ஆம் ஆண்டு தமிழர் புணர்வாழ்வு கழகத்தினால் மற்றும் அந்த காலகட்டப்பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளின் நிர்வாக கட்டமைப்புக்களால் மக்களின் பசியினை போக்குவதற்காக போரில் சிக்கித்தவித்த மக்களுக்கு வழங்கப்பட்ட கஞ்சிதான் முள்ளிவாய்க்கால் கஞ்சி.
அன்று மக்கள் பட்டிணியினால் சாகக்கூடாது என்பதற்காக விடுதலைப்புலிகளின் நிர்வாக கட்டமைப்புக்களாலும் பொது அமைப்புக்களாலும் கஞ்சி வழங்கி சிறுவர்கள் குழந்தைகளின் பசியினை போக்கியவேளை குண்டுகள்,எறிகணைகள் வீசி மக்களை படுகொலைசெய்யும் சம்பவமும் அரங்கேறியதன் நினைவழியா சாட்சியங்கள் இன்றும் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இறுதிப்போரில் எவ்வாறு எல்லாம் மக்கள் கஸ்ரப்பட்டார்கள் என்பதற்காக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வடக்கு கிழக்கு பகுதிகளில் முன்னனெடுக்கப்பட்டு வருகின்றது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேராவில் கிராம மக்கள் தாமாக முன்வந்து தேரவில் பேருந்து தரிப்பிடத்தில் கஞ்சி காச்சி வீதியால் செல்லும் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையினை இன்று முன்னெடுத்துள்ளார்கள்
முள்ளிவாய்க்காலில் பசிபோக்கிய முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி தேராவில் பகுதியில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது!
Reviewed by Author
on
May 14, 2022
Rating:
Reviewed by Author
on
May 14, 2022
Rating:





No comments:
Post a Comment