நடிகரும், இயக்குநருமான பிரதாப் காலமானார்
தகரம், ஆரோகணம், தன்மாத்ரா, 22 பெண் கோட்டயம் மற்றும் பெங்களூர் டேஸ் ஆகியவை அவரது பிரபலமான மலையாளத் திரைப்படங்களில் சில. ரித்துபேதம், டெய்ஸி, ஒரு யாத்ரமொழி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் கடைசியாக மம்முட்டி நடித்த ´சிபிஐ5: தி பிரைன்´ படத்தில் நடித்தார்.
தமிழில் மீண்டும் அழியாத கோலங்கள், மூடுபனி, இளமைக் கோலம், வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கரையெல்லாம் செண்பகப்பூ, மதுமலர், குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள், சொல்லாதே யாரும் கேட்டால், நெஞ்சில் ஒரு முள், வா இந்த பக்கம், தில்லு முல்லு, ராணி, பனிமலர், அபர்ணா, வாழ்வே மாயம், அம்மா, எச்சில் இரவுகள், ஒரு வாரிசு வருகிறது, சட்டம் சிரிக்கிறது, நன்றி மீண்டும் வருக, யுத்த காண்டம், புதுமைப் பெண், மீண்டும் ஒரு காதல் கதை, சிந்து பைரவி, மனைவி ரெடி, ஜல்லிக்கட்டு, பேசும் படம், என் ஜீவன் பாடுது, பெண்மணி அவள் கண்மணி, ராம், படிக்காதவன், ஆயிரத்தில் ஒருவன், சர்வம், அலெக்ஸ் பாண்டியன், பூஜை, ரெமோ, பொன்மகள் வந்தாள், கமலி ஃப்ரம் நடுக்காவேரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அத்துடன் மீண்டும் ஒரு காதல் கதை, ருத்ர பீடம், ஜீவா, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி ,லக்கி மேன் உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார். மீண்டும் ஒரு காதல் கதை படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றுள்ளார்.
சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது , சிறந்த அறிமுக இயக்குநர் படத்திற்கான இந்திரா காந்தி விருது, கேரளம் மாநில திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
மோகன்லால் படமான ´பரோஸ்: கார்டியன் ஆஃப் டி´காமா´ஸ்´ டிசரிலும் பிரதாப் போத்தன் நடித்தார்.
மலையாளத்தில் ரிதுபேதம், டெய்சி மற்றும் ஒரு யாத்ரமொழி ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார். ´கிரீன் ஆப்பிள்´ என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.
பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை 1985 இல் திருமணம் செய்து 1986 இல் விவாகரத்து செய்தார். பின்னர் 1990 இல் அமலா சத்யநாத் என்பவரை திருமணம் செய்தார். 2012 இல் அவரையும் விவாகரத்து செய்தார்.
நடிகரும், இயக்குநருமான பிரதாப் காலமானார்
Reviewed by Author
on
July 15, 2022
Rating:

No comments:
Post a Comment