சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 10 பேர் கைது !
இதேபோன்ற நடவடிக்கையில், வட மத்திய கடற்படை கட்டளைபிரிவின் கண்காணிப்பு கப்பல் நேற்று குருசபாடு கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகு ஒன்றை இடைமறித்துள்ளது.
விசாரணையில், கடல் வழியாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 10 நபர்களை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இவர்களில், படகு ஓட்டுநர்களான இருவர் உட்பட 4 ஆண்கள், 2 பெண்கள் மற்றும்18 வயதுக்குட்பட்ட 04 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் பேசாலை, உருமலை, கிளிநொச்சி மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 10 பேர் கைது !
Reviewed by Author
on
August 17, 2022
Rating:

No comments:
Post a Comment