நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை படுதோல்வி
இலங்கை அணியின் பந்துவீச்சில், ராஜித 2 விக்கெட்டுகளையும் தீக்ஷன, தனஞ்சய, ஹசரங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 168 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 102 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், நியூஸிலாந்து அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இலங்கை அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தசுன் சானக 35 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஷ 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் மிட்செல் சான்ட்னர் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ மற்றும் லொக்கி பெர்குசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 64 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்ரிகள் அடங்களாக, 104 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட க்ளென் பிலிப்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை படுதோல்வி
Reviewed by Author
on
October 29, 2022
Rating:

No comments:
Post a Comment