மகாவலி ஆற்றில் தவறி விழுந்து இளைஞன் மாயம்
கண்டி ஹல்லோலுவ பகுதியை சேர்ந்த ரவிந்து லக்ஷித விஜேசிங்க என்ற 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன இளைஞனை பொலிஸ் உயிர்காப்புக் குழுவினர் மற்றும் பிரதேசவாசிகள் தேடிய போதும் இன்று (02) பிற்பகல் வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மகாவலி ஆற்றில் மிகவும் ஆபத்தான இடமாக கருதப்படும் குறித்த பகுதியில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளைஞனை தேடும் பணியில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்
.
.
மகாவலி ஆற்றில் தவறி விழுந்து இளைஞன் மாயம்
Reviewed by Author
on
January 02, 2023
Rating:

No comments:
Post a Comment