மன்னாரில் மக்கள் அஞ்சலிக்காக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி.
தியாக தீபம் திலீபனின் 36 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் 'திலீபன் வழியில் வருகிறோம்' என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று வரும் நிலையில் 7 வது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை (21) மாலை குறித்த ஊர்திப் பவனி மன்னார் நகரை வந்தடைந்தது.
இன்று வியாழக்கிழமை(21) காலை பன்ரிவிரிச்சான் சின்னபனரிவிரிச்சான் தட்சானாமருதமடு பாலம்பிட்டி பெரியமடு ஊடாக ஈச்சளவக்கை வந்தடைந்து மக்கள் அஞ்சலி நிகழ்வு செய்யபட்டு மக்கள் மலர் தூவி அஞ்சலித்தபின்னர் பள்ளமடு வீதிஊடாக சன்னார் விடத்தல்தீவு சென்று மக்கள் அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் அடம்பன் ஆண்டான்குளம் பரப்புக்கடந்தான் வட்டக்கண்டல் காத்தான்குளம் முருங்கன் சிலாவத்துறை கொக்குப்புடையான் அரிப்பு நானாட்டன் வங்காலை 5:00மணி அளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்திப் பவனி வந்தடைந்தது.பின்னர் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபனின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இதன் போது மக்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பள்ளிமுனை,பனங்கட்டுக்கொட்டு,
மன்னாரில் மக்கள் அஞ்சலிக்காக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி.
Reviewed by Author
on
September 22, 2023
Rating:

No comments:
Post a Comment