சினிமா பாணியில் கிளிநொச்சியில் நடந்த கடத்தல் சம்பவத்தால் பரபரப்பு
கிளிநொச்சியில் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான நிலையில் 24 நாட்களின் பின் பொலிசாரிடம் சரணடைந்த நபரால் கிளிநொச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2ம் திகதி கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிங்கராஜன் ஜெயக்குமார் என்பவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை, காணாமல் போனதாக தேடப்பட்ட குறித்த நபர் வெட்டுக்காயங்களுடன் அடைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்து சித்திரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்ததுடன், வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி சித்திரவதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சரணடைந்த நபரை அவர் தப்பி வந்த வீட்டுக்கு அழைத்துச் சென்ற பொலிசார் சாட்சியங்களை பதிவு செய்ததுடன், தடயவியல் சான்றுகளையும் பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
காயங்களுடன் சரணடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Reviewed by Author
on
June 26, 2024
Rating:



No comments:
Post a Comment