கொழும்பை சுற்றி அச்சுறுத்தும் சுவரொட்டிகள்
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பாதாள உலகக் குழு தலைவர் மாகந்துர மதுஷின் திருமணத்திற்கு புறம்பான உறவு மற்றும் மதுஷின் சகோதரனுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த களு துஷாரவின் மனைவி திலினி நிஷாயா எனப்படுபவர் மதுஷ் துபாயில் இருக்கும் போது அவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததாகவும், மதுஷ் கைது செய்யப்பட்டு இலங்கையில் உயிரிழந்த பின்னர் அவர் மஹரகமையில் வசித்து வந்துள்ளார்.
களு துஷாரா எனப்படுபவரின் மகன் மற்றும் மேலும் மூவர் துப்பாக்கியுடன் மாத்தறை பிரதேசத்தில் விசேட பொலிஸ் குழு ஊடாக சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
களு துஷாரவின் மகனை பார்வையிட மதுஷின் சகோதரன் சிறைச்சாலைக்கு சென்ற வேளையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலில் ஒருவரான ரொட்டும்ப அமில என்பவரின் அடியாள் ஒருவர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த களு துஷாரவின் மனைவியான திலினி நிஷாயா திலகரத்ன மஹரகம பொலிஸாரிடம் , ”தனக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மதுஷின் சகோதரனுக்கும் மாத்தறையில் இனந்தெரியாத ஒருவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வசந்த சுரேந்திர பெரேரா என்ற கிளப் வசந்தவின் கொலையுடன் பாதாள உலகத்தினரிடையே மோதல் சூழல் உருவாகி கொழும்பை சுற்றியுள்ள இடங்களில் அண்மைய நாட்களில் அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment