க்ளப் வசந்தவின் இறுதி சடங்கு ; மலர்ச்சாலைக்கு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
அத்துருகிரியவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 'கிளப் வசந்த' என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பிலுள்ள மலர்ச்சாலைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கிளப் வசந்தவின் பூதவுடலை வைக்க அனுமதித்தமைக்கு அச்சுறுத்தல் விடுத்து தொலைபேசி அழைப்பொன்று மலச்சாலைக்கு வந்துள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முற்படலாம் என புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மன்னாரில் விசேட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சந்தேக நபர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்கள் மற்றும் பிற இடங்களுக்கு பாதுபாப்பை பலப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மன்னார் ஊடாக தப்பிச் செல்லும் அபாயம் அதிகரித்திருப்பதன் காரணமாக பல விசேட சோதனைச் சாவடிகள் மற்றும் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment