இந்தியதூதரக தலைமை அதிகாரி ராம் மகேஷ் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலைக்கு விஜயம்
இந்தியதூதரக தலைமை அதிகாரி ராம் மகேஷ் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலைக்கு விஜயம்
இந்தியதூதரக தலைமை அதிகாரி ராம் மகேஷ் நீண்டகாலமாக இயங்காதநிலையில் காணப்படும் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலைக்கு இன்று ஜூலை.11 வியாழக்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நீண்டகாலமாக இயங்காதநிலையில் காணப்படும் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையினை விரைவாக மீள இயங்கச்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியத் தூதரக தலைமை அதிகாரியிடம் மக்கள் வலியுறுத்தியிருந்தனர்.
மேலும் குறித்த ஓட்டுத்தொழிற்சாலையினை மீள இயங்கச் செய்வதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடியதாக இருக்குமெனவும் இதன்போது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த கண்காணிப்பு விஜயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.எம்.எம் பாரிஸ் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

No comments:
Post a Comment