சுகாதார பரிசோதகர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
சுகாதார பரிசோதகர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
- அவித்தாவ ஒலகந்த எத்தாவெட்டுனுவல பகுதியில் நீராட சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இத்தேபான பொலிஸார் தெரிவித்துள்ளனர்!
- மொரட்டுவ பிரதேசத்தின் டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் குழுவினர் மற்றும் நான்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த குளத்தில் நீராடச் சென்ற போதே இவ்வனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்!
- மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய எஸ். கௌதம் (வயது -26) மற்றும் எஸ். ஹர்ஷநாத் (வயது -28) ஆகிய இரு பொது சுகாதார உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்!
- இவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பை சொந்த இடமாகக் கொண்டவர்கள் என தெரியவருகிறது.!!-

No comments:
Post a Comment