அண்மைய செய்திகள்

recent
-

இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாக ஏலத்தில் விற்கப்பட்ட ஒரே ஒரு மாம்பழம்: இலங்கையில் சம்பவம்

 வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 285,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ம் நாள் மாம்பழ திருவிழாவான நேற்று மாலை விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.

இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் 285,000 ரூபாவுக்கு குறித்த மாம்பழம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

இவ் மாம்பழத்தை வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ச.சிந்துஜா என்பவர் 285,000 ரூபாய் செலுத்தி ஏல விற்பனையில் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாக ஏலத்தில் விற்கப்பட்ட ஒரே ஒரு மாம்பழம்: இலங்கையில் சம்பவம் Reviewed by Author on August 15, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.