அண்மைய செய்திகள்

recent
-

மயில்வாகனம் நிமலராஜனின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவில் அனுஷ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களது  24 ஆம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு  ஊடக அமையத்தில் இன்று  (19) இடம்பெற்றது .

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் கணபதிப்பிள்ளை குமணன் தலைமையில்  இடம்பெற்ற நிகழ்வில்  முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

மயில்வாகனம் நிமலராஜன் யாழ்ப்பாணத்தை தளமாக்க கொண்டு இயங்கிய முன்னணி ஊடகவியலாளர் ஆவார்.2000 அக்டோபர் 19 அன்று, இவர் இலங்கை இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவ ஆதரவோடு இயங்கும் ஒட்டுக்குழு ஆயுததாரி ஒருவரால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார்.

நிமல்ராஜன் படுகொலை செய்யப்பட்டு 24 வருடங்கள் கடக்கின்ற போதிலும் இவரின் படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது











மயில்வாகனம் நிமலராஜனின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவில் அனுஷ்டிப்பு Reviewed by Author on October 19, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.