சிறுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்த தடை
ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.
அதற்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இன்று (01) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
"குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஜனவரி 1ம் திகதி முதல் விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை தடுப்போம். அதற்கான வர்த்தமானியை அமல்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் செய்துள்ளோம். ஏனெனில் கடந்த அரசாங்கங்கள் இதனை 7-8 வருடங்களாக இழுத்தடிப்பு செய்தன. கடந்த வாரம் நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம், அதை நாங்கள் இழுத்தடிக்க போவதில்லை. ஜனவரி 1 முதல் இதை அமல்படுத்துவோம்."
Reviewed by Author
on
December 06, 2024
Rating:
.jpg)

No comments:
Post a Comment