14 வயது சிறுமி கொடூர கொலை
14 வயது சிறுமி கொலை செய்து சடலத்தை நிர்மாணிக்கப்பட்டு வந்த கழிவறை குழியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2ஆம் திகதி முதல் தனது 14 வயது மகள் காணாமல் போயுள்ளதாக கம்பஹா, அகரவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்று (5) இரவு கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
பின்னர் நடத்திய விசாரணையின் இந்தக் கொலைக்கான அடிப்படைக் காரணத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கொலையில் தனது இரண்டாவது கணவர் மீது சந்தேகம் இருப்பதாக சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முறைப்பாட்டாளரின் இரண்டாவது கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, சந்தேகநபர் சிறுமியைக் கொன்று, நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டின் பின்புறமுள்ள கழிவறை குழியில் சடலத்தை வைத்து கொங்ரீட் பலகையால் மூடியதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், கம்பஹா நீதவான் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளார்.
கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Author
on
December 06, 2024
Rating:
.jpg)

No comments:
Post a Comment