அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை சிறுமியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய 2 பெண்கள் கைது - தமிழர் பகுதியில் சம்பவம்

 முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் ஒருவரும் , அவரது கணவரும், நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.


புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் கிளிநொச்சியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை மூன்று மாதங்களாக அழைத்து வீட்டில் வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.


வைத்தியசாலையில் அனுமதி

பின்னர் குறித்த சிறுமி கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றசிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை அவதானித்த பெற்றோர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.


இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பொலிஸார் விசாரணை செய்தபோது சிறுமிக்கும் கிளிநொச்சியில் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.



அந்த பெண் மூலமாக புதுக்குடியிருப்பு பெண்ணுக்கும் சிறுமிக்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு சிறுமிக்கு பண ஆசையினை காட்டி புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் உள்ள பெண் வீட்டிற்கு அழைக்கப்பட்டு மூன்று மாதங்கள் அங்கு சிறுமி தங்கியிருந்துள்ளார்.


மூவர் கைது

சிறுமியினை வைத்து தொழில் செய்து பணத்தினை சிறுமிக்கு கொடுக்க மறுத்ததனை தொடர்ந்தே சிறுமி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


அதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸிற்கு தகவல் வழங்கப்படதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு குடும்ப பெண்ணும் கணவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுகுடியிருப்பு மற்றும் கிளிநொச்சி பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




பாடசாலை சிறுமியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய 2 பெண்கள் கைது - தமிழர் பகுதியில் சம்பவம் Reviewed by Author on January 13, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.