அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தாழ்வுபாடு கடற்படையினரால் 14 இந்திய மீனவர்கள் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.

 இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை (6) இரவு கைது செய்யப்பட்டு தாழ்வுபாடு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட  நிலையில்,குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் தென் கடல் பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை நேற்று வியாழக்கிழமை (6) இரவு இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.


பின்னர் குறித்த மீனவர்களை உடனடியாக தாழ்வுபாடு கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.


தாழ்வுபாடு கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (7) காலை குறித்த மீனவர்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


இதன் போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலய அதிகாரிகள் மன்னாருக்கு வருகை தந்து குறித்த மீனவர்களை பார்வையிட்டதோடு,அவர்களுக்கு தேவையான உதவிகளை முன்னெடுத்தனர்.


மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









மன்னார் தாழ்வுபாடு கடற்படையினரால் 14 இந்திய மீனவர்கள் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு. Reviewed by Vijithan on March 07, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.