அண்மைய செய்திகள்

recent
-

மாகாண சபைத்தேர்தல் நடத்துவதற்கான சட்டமூலம் - சாணக்கியன் எம்.பி. தனிநபர் பிரேரணை

 மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக தனிநபர் சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால் குறித்த தனிநபர் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

அத்துடன் குறித்த சட்டமூலத்தில் 2025ஆம் ஆண்டின் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டம் என்று எடுத்துக்காட்டப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதியன்று வலுவிலிருந்த 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் ஏற்பாடுகள், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்தினால் அதற்குச் செய்யப்பட்ட திருத்தங்கள் எவ்வாறிருப்பினும் 2017 செப்டெம்பர் 22ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்ற திகதி வரைக்குமான காலப்பகுதியின்போது செய்யப்பட்ட ஏதேனும் செயலுக்குப் பங்கமின்றி அத்தகைய செயல் 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு ஒவ்வாதனவாகவிராத அளவுக்கு இச்சட்டம் வலுவுக்கு வருகின்ற திகதியிலிருந்து பயனுறுவதாக நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




மாகாண சபைத்தேர்தல் நடத்துவதற்கான சட்டமூலம் - சாணக்கியன் எம்.பி. தனிநபர் பிரேரணை Reviewed by Vijithan on May 25, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.