அண்மைய செய்திகள்

recent
-

.மன்னார், வங்காலையில் கடலரிப்பு; நிலமைகளை நேரடியாகச்சென்று பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி

 >மன்னார் - நானாட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலமைகளை அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (27) நேரடியாகச்சென்று பார்வையிட்டார். 


இந்நிலையில் அப்பகுதி மக்களின் இடர்பாடுகளைகம கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுதொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார். 


இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், 


குறிப்பாக வங்காலை பகுதியில் கடலரிப்பு நிலமைகள் அதிகரித்துள்ளதால் கடல்நீர் கடற்கரையோர கீராமங்களுக்குள் உட்புகும் நிலை காணப்படுகின்றது. இதனால் அப்பகுதிமக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். 


இந்நிலையிலேயே இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு இவ்விடயம் அப்பகுதி மக்களால் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் இவ்வாறு நிலமைகளை நேரடியாகச்சென்று பார்வையிட்டதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார். 


ஏற்கனவே கடலரிப்பைத் தடுப்பதற்கு வங்காலைப்பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டதைப்போன்று, ஆறு இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படவேண்டுமெனவும், இதன்மூலமே கடல் நீர் கிராமத்திற்குள் உட்புகுவதைத் தடுக்கமுடிவதுடன், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் தடுக்கமுடியமென மக்களால் இதன்போது ளநாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. 


கடலரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த சிக்கல் நிலமை தொடர்பில் உரிய தரப்பினரது கவனத்திற்கு கொண்டுசென்று, தடுப்பணை அமைப்பதுதொடர்பில் கவனம் செலுத்தப்படுமெனவுந் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









.மன்னார், வங்காலையில் கடலரிப்பு; நிலமைகளை நேரடியாகச்சென்று பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி Reviewed by Vijithan on May 28, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.