அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இராணுவத்திற்கும் பொது மக்களுக்கும் இடையில் நட்புறவை வலுப்படுத்தும் வகையில் ஆரம்பமான கரப்பந்தாட்ட போட்டி.

 இராணுவத்திற்கும் பொது மக்களுக்கும் இடையில் நட்புறவை வலுப்படுத்தும் வகையில், இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரப்பந்தாட்ட போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் ஆரம்பமானது.


-மன்னார் மாவட்டத்தில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட அணிகளுக்கும், இராணுவத்தின் இரு அணிகள் உள்ளடங்களாக ஏழு அணிகள் கலந்து கொள்ளும் சுற்றுப்போட்டி, இன்றைய தினம்  செவ்வாய்க்கிழமை (20) ஆரம்பமானது.


 -இராணுவத்தின்  542 வது படைப் பிரிவின் கட்டளையிடும் தளபதி பிரிகேடியர் ஏ.ஆர்.சி.அசூர சிங்க தலைமையில் குறித்த போட்டி ஆரம்பமானது.


குறித்த விளையாட்டு நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அதிகாரி,மன்னார் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


 தொடர்ச்சியாக இடம் பெறும் குறித்த போட்டியின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 4-06-2025  ஆம் திகதி இடம் பெற உள்ளது














மன்னாரில் இராணுவத்திற்கும் பொது மக்களுக்கும் இடையில் நட்புறவை வலுப்படுத்தும் வகையில் ஆரம்பமான கரப்பந்தாட்ட போட்டி. Reviewed by Vijithan on May 20, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.