அண்மைய செய்திகள்

recent
-

கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகருக்கும் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம்

 கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகருக்கும், யாழ் மாவட்ட சுயேச்சை குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நிலவியது. இருவரும் ஒருவருக்குகொருவர் கடுமையாக சாடிக்கொண்டனர்.


பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற உற்பத்தி வரி ( விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றிய சுயேச்சைக்குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, ஆளும் தரப்பில் உள்ள  வடக்கு மாகாணத்தின் இரண்டு  பாராளுமன்ற  உறுப்பினiர்களின்  வாய்களை மூடுமாறு  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கேட்கின்றேன். அவ்வாறு செய்தால் நீங்கள் அங்கே வெற்றிபெறுவீர்கள். ஒருவருக்கு  உள்ளாடைக்கு எவ்வாறு கூறுவார்கள் என்பது கூட  தெரியாமல் இருக்கிறது.



சரியான தமிழ் தெரியாது எப்படி இவர் வடக்கிற்கு வந்து மக்களுக்கு உதவி செய்யப் போகின்றார்.  யட்டி என்றால் உள்ளாடையாகும். படகை நிறுத்த யட்டியை செய்வதாக கூறுவதாக கூறுகின்றார்.


புனரமைப்புக்கும் புணர்வுக்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கின்றார். இதனால் அரசாங்கத்திற்கு ஒன்றையே கூறுகின்றேன். இவர்கள் இருவரின் வாய்களை மூடி அந்த இடத்திற்கு வேறு யாரையாவது   நியமித்து  அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு வேறு யாரைவாது அனுப்புங்கள். இல்லையென்றால்  தேசிய மக்கள் சக்தியின் பெயரை இல்லாமல் செய்வேன் என்றார்.



இவ்வேளையில் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து எழுந்த  கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் ,  இவர்  எனது பெயரை பயன்படுத்தி பச்சைப் பொய்களை கூறுகின்றார். யட்டியா? ஜெட்டியா? என்று இப்போது இவர் யட்டியை தூக்கி தலையில் போட்டுக்கொண்டு அது நாற்றமடிக்கின்றது என்று சத்தமிட்டுக்கொண்டு போகின்றார். அவர் மொழியை கொச்சைப்படுத்துவதுடன், மலையக மக்களையும் கொச்சப்படுத்துகின்றார். அதுமன்றி பெண்களை கொச்சப்படுத்தலின் காரணமாக அவர் பிரதேச சபை தேர்தலில் ஒரு உறுப்பினரைக்  கூற பெற்றுக்கொள்ளவில்லை. வக்கில்லாத கூத்தாடி,


இவர் பெரிய கூத்தாடி மாத்திரமல்ல வெளிநாட்டில் இருக்கின்ற எல்லோரும்  இவரை கழுவி ஊற்றுகின்றார். இவர் காசு வாங்கி வசூல் மன்னன். தேர்தலின் போது வெளிநாட்டு மக்களின் காசுகளை சுரண்டிய, ஏமாற்றி வசூல் மன்னன் அர்ச்சுணா என்பதே இவரின் பெயராக இருக்கின்றது என்று கடுமையாக சாடினார்.


இவ்வேளையில் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி எழுந்த அர்ச்சுணா,  புலம்பெயர் தமிழர்கள் எனக்கு கோடிக் கணக்கில் பணம் தந்தனர். நான் மக்களுக்காக பணியாற்றுகின்றேன். நான் வைத்தியர் பணியையும் கைவிட்டு, வைத்தியசாலை பணிப்பாளர் பதவியையும் கைவிட்டு இங்கு வந்தது அரசியல் செய்ய அல்ல என்றார்




கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகருக்கும் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் Reviewed by Vijithan on May 20, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.