அண்மைய செய்திகள்

recent
-

இந்தோனேசியாவில் கைதான குற்றவாளிகள் இன்று நாட்டிற்கு

 இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரும் இன்றிரவு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். 


அவர்களை அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழு இன்று (30) காலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றது. 

இந்நிலையில், கைது செய்யபட்ட ஐவரையும், இலங்கையில் இருந்து சென்ற பொலிஸ் குழு பொறுப்பேற்ற நிலையில், அவர்கள் விமானத்தில் இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த விமானம் இன்றிரவு இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தோனேசிய தலைவர் ஜகார்த்தாவில் வைத்து கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகள் அண்மையில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



இந்தோனேசியாவில் கைதான குற்றவாளிகள் இன்று நாட்டிற்கு Reviewed by Vijithan on August 30, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.