அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா.

 வடமாகாண கல்வி அமைச்சின்,பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்டச் செயலகமும்,மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை யும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா இன்று வியாழன் (28) காலை 9.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.


காலை 9.30 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தடி இல் இருந்து விருந்தினர் வரவேற்பு மற்றும் பண்பாட்டுப் பேரணி ஆரம்பமானது.


சர்வமத தலைவர்கள் முன்னிலையில்-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கா.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்  பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு பிரதிப் பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஜ்,மன்னார் மாவட்ட மூத்த சட்டத்தரணி எம்.எம்.சபூர் தீன் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இதன் போது இசை நடன,கலாச்சார பண்பாடுகளை பிரதி பலிக்கும் நிகழ்வுகள் பிரதான பாலத்தில் இருந்து மன்னார் நகர சபை மண்டபம் வரை ஊர்வலமாக வருகை தந்தனர்.


மன்னார் நகரசபை மண்டபத்தில் விருந்தினர்களுக்கு கும்ப ஆர்த்தி எடுக்கப் பட்டதோடு,தமிழ் தாய்க்கு மாலை அணிவிக்கப்பட்டது.


 அதனைத்தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது. பல்வேறு நிகழ்வுகள் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேசச் செயலகங்கள் ஊடாக அரங்கேற்றப்பட்டது.


அதனைத்தொடர்ந்து மன்னெழில் 3 நூல் விருந்தினர் களினால் வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்ற பட்டதோடு, மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேசச்  செயலாளர்கள் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


குறித்த நிகழ்வில் திணைக்கள அதிகாரிகள்,பணியாளர்கள்,கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




















மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா. Reviewed by Vijithan on August 28, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.