முல்லைத்தீவில் தொடரும் மர்மக் கொலைகள்!மூங்கிலாறு பகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு! கொலை என சந்தேகம்
>முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில்
உயிரிழந்த நிலையில் 84 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் உள்ள வீட்டில் குறித்த பெண் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அறிந்து மக்கள் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்
சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டதுடன் சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் அவர்கள் உடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்
கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 84 வயதுடைய கோபாலன் குண்டுமணி என்கின்ற பெண்மணியினுடைய சடலமே இன்று (28) புதுக்குடியிருப்பு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது
ஏற்கனவே மூங்கிலாறு பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு யுவதி சடலமாக மீட்கப்பட்ட வீட்டிலேயே குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த பெண் குறித்த காணியினை விலைக்கு வாங்கி சிறு கைத்தொழில் செய்து வந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இது கொலையா? என்ன நடந்தது என்பது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சில நாட்களுக்கு முன்னதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் இவ்வாறு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார் இவ்வாறான தொடர் சம்பவங்கள் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

No comments:
Post a Comment