அண்மைய செய்திகள்

recent
-

யாழில் கஞ்சா விற்கும் பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்; வெளியான பகீர் தகவல்

 பிரான்ஸில் இருந்து வந்துள்ள யாழ்ப்பாணத்தை சேர்த புலம் பெயர் தமிழர் ஒருவர் யாழ்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலங்கு வைத்து போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


குறித்த நபர் பாடசாலை மாணவ்ர்களை இலக்கு வைத்து மாவா பாக்கு விற்பனை மற்றும் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.




பிள்ளைகள் கெட நீங்களே  காரணமாகாதீர்கள் பெற்றோர்களே


யாழில் இளம் தலை முறையில் வழி மாறி செல்வதற்கு புலம் பெயர் தமிழர்கள் அனுப்பும் பணமே காரணம் என சமூக ஆரவலர்கள் பலராலும் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.




இந்நிலையில் அதற்கும் ஒருபடி மேல் சென்று குறித்த பிரான்ஸ் வாழ் நபர், அடியாட்களை வைத்து யாழில் மாணவர்களுக்கு போதை பொருள் கொடுப்பதான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதன் காரணமாக  மாணவர்கள் கல்வியின் கவனம் சிதறி தங்கள் வாழ்க்கையை  தொலௌஇக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.




எனவே  பெற்றோர்களே பிள்ளைகளுக்கு தேவைக்கு அதிகமாக பண்ம் கொடுக்காதீர்கள். அதுமட்டுமல்லாது   உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை  உன்னிப்பாக  அவதானிக்கா விட்டால் அவர்களின் வாழ்வு கெட்டு சுவராகிவிடும் எனபதை நினைவில் கொள்ளுங்கள்.



இவ்வாறான நிலையில் மாணவர்களின் வாழ்வை நாசப்படுத்தி அவர்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் குறித்த பிரான்ஸ் வாழ் நபர் தொடர்பில் கடும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




அதேவேளை யாழில் அண்மைய பொலிஸார் அதிரடியில் பல போதைப்பொருள் வியாபாரிகளும், போதைப்பொருள் கடத்தல் காரர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




யாழில் கஞ்சா விற்கும் பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்; வெளியான பகீர் தகவல் Reviewed by Vijithan on November 03, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.