அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் கொழும்பிற்கு கட்டாய இடமாற்றம்

 -மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கொழும்பிற்கு கட்டாய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.


கடந்த யூலை மாதம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான  கடல் அட்டைகளை  முறையற்ற விதத்தில் ஏலமிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானம் இழக்கப் பட்டமை தொடர்பாக மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி  பணிப்பாளருக்கு கட்டாய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.


இவ்விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது





மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் கொழும்பிற்கு கட்டாய இடமாற்றம் Reviewed by Vijithan on September 05, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.