அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் சுற்றுலா தகவல் மையம் திறந்து வைப்பு-

 மன்னார் மாவட்டத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில், மன்னார் பிரதான பாலம்   மன்னார் நுழைவாயில் பகுதியில்    அமைந்துள்ள வங்காலை பறவைகள் சரணாலய வளாகத்தில் அமைக்கப்பட்ட சுற்றுலா தகவல் மையம் இன்றைய தினம் வியாழக்கிழமை (15) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.


சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்ரன் ஜயக்கொடி தலைமையில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க,பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் இணைந்து குறித்த சுற்றுலா தகவல் மையத்தை திறந்து வைத்தனர்.


இதன் போது வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் ,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,உதவி அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்,பிரித்தானிய தூதரக அலுவலர்கள் ,UNDP நிறுவன அலுவலர்கள் திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


அதன்போது அங்கு முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக ஆராய பட்டதோடு,கண்டல் தாவரங்கள் உள்ளடங்களாக இயற்கையை சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்காக அமைக்கப்பட்ட பகுதியையும் குறித்த குழுவினர் நேரடியாக பார்வையிட்டனர்.


 குறித்த தகவல் மையம் அமைப்பதற்கான பங்களிப்பினை  பிரித்தானிய தூதரகம்,  மற்றும் UNDP நிறுவனம் போன்ற வை வழங்கியுள்ளது.











மன்னார் மாவட்டத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் சுற்றுலா தகவல் மையம் திறந்து வைப்பு- Reviewed by Vijithan on October 15, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.