அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குழந்தை நலப் பிரிவு , வைத்தியர்களுக்கான விடுதித் தொகுதி அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு

 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள  குழந்தை நலப் பிரிவு கட்டிடத்தொகுதி மற்றும்  வைத்தியர்களுக்கான விடுதித் தொகுதி அமைப்பதற்கான   அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (15) காலை 10 மணியளவில் இடம் பெற்றது.


-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம் பெற்றது.


குறித்த நிகழ்வில்  பிரதி அமைச்சர்களான   அன்ரன் ஜெயக்கொடி , உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் இணைந்து  அடிக்கல் நாட்டி வைத்தனர்.


இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்,,வைத்தியர்கள்,வைத்திய சாலை பணியாளர்கள் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.


மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் பொருட்டு, கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் சுமார் 1000 மில்லியன் ரூபாவுக்கான கட்டிட கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


 ஜனாதிபதி அவர்களின் தலைமையில் 600 மில்லியன் ரூபா பெறுமதியான விபத்து மற்றும் அவசர சேவைகள் பிரிவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான 600 மில்லியன் ரூபா வேலைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (15)   குழந்தை நலப் பிரிவுக்காக 4 மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியும், வைத்தியர்களுக்கான விடுதித் தொகுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













 


மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குழந்தை நலப் பிரிவு , வைத்தியர்களுக்கான விடுதித் தொகுதி அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு Reviewed by Vijithan on October 15, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.