அண்மைய செய்திகள்

recent
-

காவந்திஸ்ஸ யானையின் மரணத்தில் சந்தேகம்

 இலங்கையின் தேசிய சொத்தாகத் திகழ்ந்த 'காவந்திஸ்ஸ' யானையின் மரணம் வெறும் இயற்கையான மரணம் அல்லவென்றும், அதுவொரு படுகொலை எனவும் தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல, இதற்கு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பற்ற தன்மையே காரணம் எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

இந்த யானைக்கு சுடப்பட்ட திகதியையும் பிரதேசத்தையும் பற்றிய தெளிவான தகவல்கள் இருந்தபோதிலும், குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு வனவிலங்கு திணைக்களம் தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

 

அத்துடன், யானை மயக்கமடைந்திருந்த வேளையில் அதன் உடலில் காணப்பட்ட அடையாளம் தெரியாத காயங்கள் மற்றும் வடுக்கள் தொடர்பில் முறையான ஸ்கேன் பரிசோதனைகள் கூட மேற்கொள்ளப்படவில்லை.

 

பிரேத பரிசோதனை மூலம் சுடப்பட்ட தோட்டா, துப்பாக்கி மற்றும் சுடப்பட்ட காலப்பகுதியைத் துல்லியமாக கண்டறிய முடியும் என்பதால், அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.





காவந்திஸ்ஸ யானையின் மரணத்தில் சந்தேகம் Reviewed by Vijithan on October 18, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.