கிளிநொச்சியில் ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் செலுத்தியும் மின்சார இணைப்பு இல்லை!
பூநகரி, வில்லடி பரமன்கி ஐயனார் ஆலயத்திற்கு புதிய மின்சார இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக, கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி நுகர்வோர் சேவை நிலையத்தில் 500,764.10 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும், பணம் செலுத்தி பல மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், (ஒரு வருடம் நிறைவடையபோகின்றது) இதுவரை ஆலயத்திற்கு மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை என ஆலய நிர்வாகத்தினரும் அப்பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர்.
ஆலயத்திற்கு மின்சார இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்களிடம் நிதி சேகரித்துப் பணம் செலுத்தியுள்ள போதிலும், இணைப்பு வழங்கப்படாதமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக, குறித்த ஆலயத்திற்கு மின் இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Reviewed by Vijithan
on
October 19, 2026
Rating:


.jpg)


No comments:
Post a Comment