அண்மைய செய்திகள்

recent
-

சூரிய ஒளியின் மூலம் சித்திரம் வரைந்து அசத்தும் அம்பாறை தமிழ்ச் சிறுவன்

சூரிய ஒளியால் சித்திரம் வரைய முடியுமென்று நிருபித்துக் காட்டியிருக்கிறார் வளத்தாப்பிட்டி சிறுவனொருவன்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய தமிழ்க்கிராமமான வளத்தாப்பிட்டி கிராமத்தைச்சேர்ந்த 9 வயது சிறுவன் ரகுநாதன் கிசோத் என்பவரே இதனை சாதித்துக் காட்டியிருக்கிறார்.

இவர் வளத்தாப்பிட்டி அ.த.க.பாடசாலையில் 4ம் வகுப்பில் கற்பவராவார். இவர் வகுப்பில் தொடர்ந்து 1ம் பிள்ளையாக வருபவரென்று அதிபர் பி.கமலநாதன் சான்று பகர்கிறார்.

தந்தையான ரகுநாதன் காரைதீவைச் சேர்ந்தவர்.வளத்தாப்பிட்டியில் வாழ்ந்து வருகிறார். வெல்டிங் தொழில் செய்து வருபவராவார்.

சரி விடயத்திற்கு வருவோம். அப்படி இவர் என்ன செய்து விட்டார்?

பல வசதியீனங்களுக்கு மத்தியில் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் வாழும் ஒரு சிறுவன் இவ்விடயத்தை சாதித்தமையே இதன் சிறப்பம்சமாகும்;.இது பெரும் கண்டுபிடிப்பல்ல என்றாலும் இச்சிறுவனின் முயற்சியை பாராட்டவேண்டும்.

சரி இவர் எப்படி செய்கிறார் ? என்பதைப் பார்ப்போம்.

இச்சிறுவன் சூரிய ஒளியை குவிவு வில்லையைப் பாவித்து ஒளியை ஓரிடத்தில் குவியச் செய்கிறான். இது சாதாரண விடயம். ஆனால் அவ் ஒளியைப் பாவித்து சித்திரம் வரைவதும் எழுதுவதும் தான் வியப்பாகவுள்ளது.

சூரிய ஒளியை அசையக் கூடிய கைவில்லையைப் பயன்படுத்தி ஒடுக்கி அவ் ஒளியால் சித்திரம் வரைகிறான் எழுதுகிறான். நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டுமென்கிறான் இந்தச் சுட்டிப்பயல் கிசோத்.

ஆம் அதற்காக இச்சிறுவன் 03 மாத காலம் முயற்சி செய்திருக்கிறான். பேப்பரில் எழுதி பார்த்திருக்கிறான் றெஜிபோமில் றப்பரில் வரைந்து பார்த்திருக்கிறான் செருப்பில் பெயர் பொறித்துப் பார்த்திருக்கிறான்.
இறுதியாக கார்ப்பட் துணியில் எழுதி வரைந்து பார்த்தான்.சரி வந்தது. அதன் பின்னரே இதனை பலருக்கும் தெரியப்படுத்தினான்.

இதற்காக தனது தந்தையின் உதவியுடன் ஒரு உபகரணத்தைத் தயாரித்து இதனை தற்சமயம் செய்து காட்டுகிறார்.

அவரது இளவயது ஆக்க முயற்சியை பாராட்டுவோம். ஊக்கப்படுத்துவோம்.
சூரிய ஒளியின் மூலம் சித்திரம் வரைந்து அசத்தும் அம்பாறை தமிழ்ச் சிறுவன் Reviewed by NEWMANNAR on April 08, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.