அண்மைய செய்திகள்

recent
-

கைதுசெய்யப்படும் முன்னாள் போராளிகளை நீதிமன்றில் ஏன் முன்னிலைப்படுத்துவதில்லை


பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்படும் நபர்கள் எதற்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை என காணாமல் போனவர்களை தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு வினவியுள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்படும் நபர்கள் பூசா தடுப்பு முகாமில் அல்லது கொழும்பு 4 ஆம் மாடியில் தடுத்து வைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, அவர்களது குடும்பங்களுடன் இணைந்து வாழ்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என வாக்குறுதி அளித்த நல்லாட்சி அரசாங்கம் தற்போது அவர்களை கைதுசெய்வதாகவும் கவலை தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த ஆட்சியைப் போன்றே நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அமைந்துள்ளதாகவும் காணாமல் போனவர்களை தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கிலே ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று கூறினாலும், இன்று ஜனநாயக ரீதியாக எவரையும் கைதுசெய்யதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

காரணம், சிவில் உடையில் வந்து, வெள்ளைவானில் கடத்தி செல்லப்பட்டு பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்படுகின்றார்கள். ஜனநாயகம் உண்மையாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அவர்கள் உரிய முறையில் அவர்களுடைய சீருடையில் வந்து கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கைதுசெய்யப்படும் முன்னாள் போராளிகளை நீதிமன்றில் ஏன் முன்னிலைப்படுத்துவதில்லை Reviewed by NEWMANNAR on April 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.