அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-பயணிகள் அசௌகரியம்(Photos)

இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று வியாழக்கிழமை (5-05-2016) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக மன்னாரில் இருந்து உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களுக்காக இலங்கை அரச போக்குவரத்துச் சேவைகள் தடைப்பட்டிருந்தது.

இன்று வியாழக்கிழமை காலை 4 மணிமுதல் மன்னார் சாலை பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள டிப்போவிற்கு முன் ஒன்று கூடிய இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

குறிப்பாக எமது நீண்ட கால பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வேண்டும்,காலாவதியான கணக்காளரே உமது ஓய்வு எப்போது,மன்னார் சாலையின் கணக்காளர் தேவராஜாவா இல்லை மனைவியா பதில்?,இனியும் ஏமாற்ற வேண்டாம் எம் தொழிலாளர்களை இன்றே முடிவு தாருங்கள்,கணக்காளர் ஒருவரின் தனிப்பட்ட நலனுக்காக 220 தொழிலாளர்கள் பாதீக்கப்படுவதா? உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை காட்சிப்படுத்திய நிலையில் தமது பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலைக்கு உரிய காணக்காளர் காரியாலயம் நீண்ட காலமாக வவுனியாவில் இயங்கி வருகின்றது.இதன் காரணமாக தொழிலாளர்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இலங்கை அரச போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலையில் 300 ற்கும் அதிகமானவர்கள் கடமையாற்றுகின்றனர்.இவர்கள் சாரதி, காப்பாளர், பொறியியலாளர், அலுவலக உத்தியோகஸ்தர்களாக கடமையாற்றுகின்றனர்.

இவர்களின் சகல வித தேவைகளுக்கும் வவுனியாவிற்குச் சென்று வர வேண்டியுள்ளது.

இதனால் பணியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலைக்கான காணக்காளர் காரியாலயத்தை உடனடியாக மன்னாரிற்கு மாற்றி தகுதியான கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரி குறித்த பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

குறித்த பிரச்சினைகள் குறித்து பல தடவைகள் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் இலங்கை அரச போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை தொடர்பில் அதிகாரிகள் அக்கரை இன்றிய செயற்பட்டு வருவதாகவும் இந்த நிலையிலே இன்று வியாழக்கிழமை தமது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பணிப்பகிஸ்கரிப்பு இடம் பெற்ற இடத்திற்கு வருகை தந்த வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

எனினும் உரிய உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உரிய முடிவை பெற்றுத்தரும் வரை பணிப்பகிஸ்கரிப்பை கைவிடுவதில்லை என பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட பணியாளர்கள் தெரிவித்தனர்.தற்போது வரை பணிப்பகிஸ்கரிப்பு இடம் பெற்று வருகின்ற து.

-இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.


மன்னார் நிருபர்

(5-05-2016)








இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-பயணிகள் அசௌகரியம்(Photos) Reviewed by NEWMANNAR on May 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.