அண்மைய செய்திகள்

recent
-

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி பேச்சுவார்த்தை-Photos


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் சந்தித்து மாலபே சைட்டம் மருத்துவ கல்வி வழங்கும் நிறுவனம் தொடர்பில் நாட்டில் எழுந்துள்ள கொந்தளிப்பு நிலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தியது.

இச் சந்திப்பு பற்றி அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உப செயலாளர் வைத்தியர் சாயி நிரஞ்சன் தகவல் தருகையில் மாலபே ளுயுஐவுஆ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட முறை தொடர்பிலும், அவர்கள் மருத்துவக் கல்வியின் தரத்தை பேணாமை தொடர்பிலும், அதற்கு இலங்கை வைத்திய சபையின் அங்கீகாரம் இல்லாமை தொடர்பிலும் , ஜனாதிபதி அவர்களிடம் எடுத்துக் கூறினோம் .
ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய தராதரங்களை பேணாமல் வைத்தியர்களை உருவாக்கும் போது நோயாளர்கள் சேவையில் ஏற்படக்கூடிய ஆபத்தையும், நோயாளர் சேவையின் தராதரத்தை பேண அரசுக்கு உள்ள கடப்பாட்டையும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.
மேலும் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் முகமாக ஜனாதிபதி அவர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பாராட்டிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் , பெரும் வசதிகளுடன் இயங்கும் கொழும்பு வைத்திய பீடத்திக்கே ஒரு வருட காலப் பகுதியில் ஒன்றுக்கு மேட்பட்ட அணிகளை இணைத்துக் கொள்ள முடியாமல் இருக்கும் போது இந்த நிறுவனம் பணத்துக்காக பெருமளவு மாணவர்களை அவ்வாறு இணைத்துக் கொள்வதாகவும் ,உடனடியாக இச்செயன்முறையை நிறுத்துமாறும் கோரினோம் , ஜனாதிபதி அவர்கள் சுகாதார அமைச்சராக இருந்த காலப் பகுதியில் மாணவர்களை இணைப்பதை நிறுத்துமாறு விடுத்த அறிவுறுத்தலையும் மீறி மாணவர்களை இந்நிறுவனம் இணைத்துக் கொள்வதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் அவரிடம் சுட்டிக் காட்டப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களையும் தாம் சந்திக்கவுள்ளதாகவும் , பல்கலைக் கழக பேராசிரியர்கள் சிலரை ஏலவே சந்தித்துள்ளதாகவும்ண, மாணவர்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை கண்டு தாம் கவலை அடைவதாகவும் , இது தொடர்பில் அனைவருக்கும் பொருத்தமான தீர்வு ஒன்றை தான் விரைவில் வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.




அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி பேச்சுவார்த்தை-Photos Reviewed by NEWMANNAR on February 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.