அண்மைய செய்திகள்

recent
-

இராணுவத்துக்கென காணிகளை சுவீகரிக்க ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டேன் - வடக்கு முதலமைச்சர்


வடக்கில் எந்தவொரு காரணத்துக்காகவும் இராணுவத்தினருக்கென காணி சுவீகரிப்பதற்கு அனுமதி வழ ங்கப்படமாட்டாது என தெரித்துள்ள வடமாகாண  முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தான் மறுக்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் நேரடியாக கொழும்பு தலைமைகளுடன் தொடர்பு கொண்டு அனுமதி பெறுவதா கவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வடக்கு மாகாண சபையின் 84 ஆவது அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் காணி தொடர்பான விடயம் பேசப்படும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கில் காணி சுவீகரிக்கும் விடயத்தில் முதலமைச்சர் கவனத்தில் எடுக்கவேண்டும். ஏனெனில் காணி விடயத்தில் திரைமறைவில் காணி சுவீகரிப்பு நடைபெற்று வருகிறது.  பாதுகாப்பு அமைச்சின்  மேலதிக செயலாளருடன் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (நேற்று) கலந்துரையாடல் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்  நாம் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளோம் என அறிந்தவுடன் குறித்த கலந்துரையாடலை பலாலி பாதுகாப்பு தலைமையகத்தில் நடத்துகின்றனர்.

காணி தொடர்பான என்ன இணக்கப்பாடு எடுப்பதாக இருந்தாலும் மாவட்ட ஒருங்கிணைப்பு  குழு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது என அரச அதிபருக்கு திட்டவட்டமாக தெரிவித்திருந்தேன். அதனை மீறி முடிவுகள் எடுக்கப்பட்டால் அரச திணைக்களங்கள், படை முகாம்களை முடக்கி போராட்டங்கள் மேற்கொள்வோம்.

யாழ்ப்பாணத்தில் தற்போது 1600 ஏக்கர் காணியை சட்ட பூர்வாக சுவீகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் பதிலளித்த முதலமைச்சர், படையினர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு காணி தேவையென என்னிடம் வந்தால் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இனியும் வழங்கமாட்டேன் என தெரிவித்து வருகிறேன்.

அதனால் அவர்கள் நேரடியாக கொழும்பில் இருந்து அனுமதி எடுக்கிறார்கள் என கேள்விப்பட்டேன். அது எவ்வாறு எந்த சட்டத்தின் கீழ் மேற்கொள்கிறார்கள் என்று கவனத்தில் கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.    

இராணுவத்துக்கென காணிகளை சுவீகரிக்க ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டேன் - வடக்கு முதலமைச்சர் Reviewed by Author on February 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.