அண்மைய செய்திகள்

recent
-

பிரபாகரனை விட விக்னேஸ்வரன் ஆபத்தானவர்: அச்சத்தில் தென்னிலங்கை


விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை பார்க்கிலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் ஆபத்தானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பை விடவும் தமிழ் மக்கள் பேரைவை மிகவும் ஆபத்தானது என பொது பலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கு ஆசி வழங்கிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடக்கில் அரசாங்கத்தின் ஆட்சி நடைபெறவில்லை. வடக்கில் சிங்கள மக்கள் வாழ்வதற்கான உரிமை இல்லாமல்போயுள்ளது.

பிரதமர் மற்றும் ஜனாதிபதி காரியாலயத்தில் இருந்து அனுப்பும் சிங்கள மொழியிலான கடிதங்களைக் கூட குப்பைத்தொட்டிக்குள் போடும் நிலைமை வடக்கில் காணப்படுகின்றது.

கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் வாழ்ந்த சிங்கள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். புலம்பெயர் தமிழ் மக்கள் சர்வதேச ரீதியில் அவர்களது பிரிவினைவாதத்தை வெற்றிகொள்ள செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாட்டின் அடிப்படையிலேயே வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுகின்றார்.

அந்த வகையில், அவரால் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையும் பயங்கரமானது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை விட விக்னேஸ்வரனின் இந்த அரசியல் முன்னணி மிகவும் பயங்கரமானது.

எவ்வாறாயினும், பிரபாகரன் இருந்த காலத்தில் எமக்கான அச்சுறுத்தல் என்னவென்று தெரிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை விட விக்னேஸ்வரன் ஆபத்தானவர்: அச்சத்தில் தென்னிலங்கை Reviewed by Author on February 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.