அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் கொல்லப்பட்டதாக தகவல்

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய புறநகர்ப் பகு­தி­களில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச்செல்­லப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரும் கொலை செய்­யப்­பட்­டு­விட்­ட­தாக விசா­ர­ணை­களில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு தெரி­விக்­கின்­றது.



கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்பட்டு காணாமல் போகச்செய்­யப்பட்ட சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்ள கொமாண்டர் சுமித் ரண­சிங்க மற்றும் இவ்­வி­வ­கா­ரத்தின் பிர­தான சாட்­சி­யா­ளர்­களில் ஒரு­வ­ரான கடற்­படை கப்டன் வெகெ­தர ஆகி­யோரின் வாக்கு மூலங்கள் ஊடாக இது தொடர்­பி­லான தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­ட­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ர­ணை­யாளர் பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­னவின் கவ­னத்­துக்கு கொண்டு வந்தார்.

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய புற நகர் பகு­தி­களில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்­லப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ரணை ஒரு மாதத்தின் பின்னர் நேற்று மீளவும் கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.

முன்னாள் கடற்­படை தள­பதிஇ வசந்த கரண்­ணா­கொட தனது பாது­கப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த கடத்தல் விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபே­சே­கர உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் தெசேரா ஆகி­யோரின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்தல் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

கொழும்புஇ கொட்­டாஞ்­சேனைஇ தெஹி­வளைஇ வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன்இ பிரதீப் விஸ்­வ­நாதன்இ தில­கேஸ்­வரன் ராம­லிங்கம்இ மொஹம்மட் திலான்இ மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த கன­க­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இது குறித்த வழக்கு கோட்டை நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெறும் நிலையில் நேற்றும் அது குறித்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

நேற்­றைய விசா­ர­ணையின் போது இக்­க­டத்­தல்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு பிணையில் உள்ள கடற்­ப­டையின் முன்னாள் லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்க மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­த­துடன் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள கடற்­படை சிறப்பு புல­ன­ாய்வுப் பிரிவின் கமான்டர் சுமித் ரண­சிங்க, கடற்­படை சிப்பாய் லக்ஷ்மன் உத­ய­கு­மார ஆகியோர் சிறை அதி­காரிகளால் மன்றில் ஆஜர்செய்­யப்பட்­டனர்.விசா­ரணை அதி­கா­ரி­யான குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்­வாவும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் திசேரா ஆகியோர் மேல­திக விசா­ரணை அறிக்­கை­யுடன் ஆஜ­ரா­கி­யி­ருந்தார். பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ராக கடத்­தப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­களின் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்ன மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார்.

சந்­தேக நபர்கள் சார்பில் நேற்று 10 இற்கும் அதி­க­மான சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். ஜனாதி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்­வாவின் தலை­மையில் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான அனுஜ பிரே­ம­ர­தனஇ அசித் சிறி­வர்­தனஇ ரசிக பால­சூ­ரிய உள்­ளிட்ட 10 பேரே இவ்­வாறு ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு கூடுதல் சக்­தி­யாக சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் டிலான் ரத்­நா­யக்க மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார்.

இந் நிலையில் விசா­ர­ணை­யா­னது ஆரம்­பிக்­கப்பட்ட போது, பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா மன்­றுக்கு மேல­திக விசா­ரணை தொடர்பில் எடுத்­து­ரைத்தார்.

'கனம் நீதிவான் அவர்­களே கடந்த 2009.05.28 ஆம் திகதி முதல் இந்த விவ­காரம் தொடர்பில் நான் விசா­ரணை செய்து வரு­கின்றேன். கடத்­தப்­பட்ட 11 பேரும் கொழும்பு சைத்­திய வீதி­யிலொ உள்ள பிட்டு பம்பு, திரு­கோணமலை நிலத்­தடி சிறை க்கூடமான கன்சைட் ஆகி­ய­வற்றில் தடுத்து வைக்­கப்ப்ட்­டி­ருந்­த­மைக்கு தெளி­வான ஆதா­ரங்கள் உள்­ளன. இக்­க­டத்­தல்கள் கடற்­படை லெப்­டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்­சியின் கீழ் இயங்­கிய குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ள­மைக்­கான ஆத­ரங்கள் உள்­ளன. அவை அனைத்தும் இன்று மன்­றுக்கு சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளன. சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இக்­க­டத்தல் தொடர்­பி­லான முதல் சந்­தேக நப­ரான சம்பத் முன­சிங்­கவின் கீழ் சேவை­யாற்­றிய உபுல் பண்­டார எனும் கடற்­படை வீரர் தன்­னிடம் தெரி­வித்­த­தாக இரண்­டா­வது சந்­தேக நப­ரான கொமாண்டர் சுமித் ரண­சிங்க அவ­ரது வககு மூலத்தில் சில விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். அதா­வது கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்­களில் நால்­வரை திரு­ம­லைக்கு கொண்டு போகும் வழியில் கொலை செய்து துண்டு துண்­டாக வெட்டி களனி கங்­கையில் வீசி­விட்­ட­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

இத­னை­விட இந்த விவ­கா­ரத்தில் பிர­தான சாட்­சி­களில் ஒரு­வ­ரான கப்டன் வெல­கெ­தர தனது சாட்­சி­யத்தில் பல தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். தான் திரு மலை கன்சைட் முகாமில் சேவையில் இருந்த போது அதனுள் இருந்து கொல்­லப்­பட்­ட­வர்­களின் சட­லங்­களை பொலித்­தீனில் சுற்றி கெப் வண்டி ஒன்றில் முகா­முக்கு வெளியே எடுத்து செல்­வதை தான் அவ­தா­னித்­த­தாக அவர் எம்­மிடம் சாட்­சியம் அளித்­துள்ளார்.

அத்­துடன் குறித்த கன்சைட் முகாமில் தடுத்து வைக்­கப்பட்­டி­ருந்த மற்­றொரு கடற்­படை வீரரின் வாக்கு மூலத்­துக்கு அமை­வாக அங்கு இருந்த அனை­வரும் படிப்­ப­டி­யாக கொல்­லப்பட்­டுள்­ளமை வெளிப்­ப­டுத்­தப்பட்­டது. எனவே இந்த ஐந்து மாணவர் உள்­ளிட்ட 11 பேரும் கொலை செய்­யப்ப்ட்­டி­ருக்க வேண்டும். இந்த விசா­ர­ணைகள் கடற்­ப­டையை இலக்­காக வைத்து இடம்­பெ­று­வ­தா­கவும் தேசிய பாது­க­ாப்­புக்கு அச்­சு­ருத்தல் எனவும் பலரால் கூறப்­ப­டு­கி­றது.

உண்­மையில் இந்த விசா­ர­ணைகள் தேசிய பாது­க­ாப்­புக்கு எவ்­வித அச்­சு­றுத்­தலும் இல்லை. ஏனெனில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்­த­பா­யவின் உத்­தர­வுக்கு அமை­யவே இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இச்­சம்­ப­வத்­துடன் கடற்­ப­டை­யி­ன­ருக்கு உள்ள தொடர்பு குறித்து நாம் முதலில் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விடம் கூரிய போதுஇ இது தேசிய பாது­காப்பு விவ­காரம் அல்ல. அவர்கள் தனிப்­பட்ட ரீதியில் செய்­துள்­ளார்கள். எனவே நீங்கள் உங்கள் விசா­ர­ணையை தொட­ருங்கள் என அவர் எமக்கு உத்­தரவிட்டார். இத­னை­விட அப்­போ­தைய தேசிய புல­னாய்வுப் பிரிவு பணிப்­பாளர் ஹெந்த விதா­ர­ண­வு­டனும் நாம் இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டிய போது அவரும் இத­னையே பதி­லாக அளித்தார். எனவே எனாம் தேசிய பாதுகாப்­புக்கு அச்­சு­ருத்தல் ஏற்­படும் வகையில் எந்த விசா­ர­ணை­யையும் முன்­னெ­டுக்­க­வில்லை என சுட்­டிக்­காட்­டினார்.

இத­னை­ய­டுத்து பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் டிலான் ரத்­நா­யக்க கருத்­துக்களை முன்­வைத்தார். ' கனம் நீதிவான் அவர்­களேஇ இந்த சம்­பவம் குறித்து நேர­டி­யாக தொடர்­பு­பட்ட மேலும் இருவர் கைது செய்­யப்­ப­ட­வுள்­ளனர். அவர்­களை தேடி வரு­கின்ரோம். இத­னை­விட இந்த விவ­கா­ரத்­துடன் கட்­டளை ரீதி­யாக அல்­லது ஆலோசனை ரீதி­யாக தொ­டர்­பு­பட்ட உயர் அதி­கா­ரிகள் தொடர்பில் எடுக்க வேண்­டிய நட­வ­டிக்கை தொடர்பில் நாம் தொடர்ந்து பரி­சீ­லித்து வரு­கின்றோம்.' என்றார்.

இத­னை­ய­டுத்து பாதிக்­கப்பட்ட தரப்பின் சட்­டத்­த­ர­ணி­யான அச்சலா சென­வி­ரத்ன வாதிட்டார்.

' கனம் நீதிவான் அவர்­களேஇ ஒவ்­வொரு பீ அறிக்­கை­யிலும் பெயர் குறிப்­பி­டப்பட்­டுள்ள லப்­டினன் கொமான்டர் ஹெட்டி ஆரச்சி இன்னும் கைது செய்­யப்­ப­ர­வில்லை. அவர் தலை­ம­றை­வ­கை­விட்­ட­தாக நாம் கேள்­விப்­ப­டு­கிறோம்.

இத­னை­விட இந்த வழக்கின் முதல் சந்­தேக நபர் லெப்­டினன் கொமாண்டர் சம்பத் முன­சிங்க பினையில் உள்ளார். அவ­ரது சம்­பந்தம் தொடர்பில் தெளி­வாக விசா­ர­ணை­களில் வெளி­ப்ப­டுத்­தப்பட்­டுள்ள நிலையில்இ அனை­வ­ருக்கும் எதி­ரான குற்­ற­வியல் சட்­டத்தின் 296 ஆவது அத்­தி­ய­ாயத்­துக்கு அமைய குற்­றச்­சாட்டு உள்ள நிலையில் அவ­ரது பிணையை இரத்து செய்து அவ­ரையும் விளக்­க­ம­றி­யலில் வைக்க வேண்டும் என் அகோ­ரினார். அத்­துடன் ஏனைய சந்­தேக நபர்­களும் உட­ன­டி­யாக கைது செய்­யப்­பட வேண்டும் என கோரினார்.

இத­னை­ய­டுத்து ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அனுஜ பிரே­ம­ரத்ன ஆகியோர் விளக்­க­ம­றி­யலில் உள்ள சந்­தேக நபர்­க­ளுக்கு பிணை கோரினர். பிர­தான சாட்­சி­யான வெல­கெ­தர மனிதக் கடத்தல் சம்­பவம் ஒன்று தொடர்பில்இ தற்­போது கைதா­கி­யுள்ள 2 ஆம் சந்­தேக நப­ருடன் கோபத்தில் இருந்தார். அதனால் பொய்­யான விட­யங்­களை முன்­வைப்­ப­தா­கவும் அவர்கள் குறிப்­பிட்­டனர். அத்­துடன் யாரோ சிலரின் தேவைக்­காக குற்றப் புல­னாய்வுப் பிரிவு கடற்­படை புல­னாய்வுப் பிரிவை இலக்கு வைப்­பதா குற்றம் சுமத்­தி­ய­துடன் இக்­கை­து­க­ளினால் தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்டி பிணை கோரினர்.

எனினும் சட்ட மா அதிபர் பிணை வழங்க கடும் ஆட்சேபனை தெரிவித்தார். 7 ஆண்டுகளுக்கு முன்னர் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்கள் 7 வருடங்களாக இல்லை என்பது அவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவே அர்த்தம். எனவே இதற்கு பிணை வழங்க முடியாது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க வாதிட்டார்.

எனினும் இதற்கு சந்தேக நபர்கள் தரப்பு ஆட்சேபனம் வெளியிட்டது.

இந் நிலையில் பிணை தொடர்பில் ஆட்சேபனங்களை எதிர்வரும் 24 ஆம் திகதி எழுத்து மூலம் மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிவான் வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்து அதுவரை விளக்கமறியலில் இருந்து வரும் இரு சந்தேக நபர்களையும் தொடர்ந்து அவ்வாறே தடுத்து வைக்க உத்தரவிட்டார். அத்துடன் பிணையில் உள்ள லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்கவின் பிணையை ரத்து செய்து அவரை புதிய குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைப்பதா? இல்லையா? என்பதையும் அந்த திகதியில் மன்றுக்கு அறியத்தருமாறு சட்ட மா அதிபருக்கு நீதிவான் பணித்தார்.
வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் கொல்லப்பட்டதாக தகவல் Reviewed by NEWMANNAR on March 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.