வாள்வெட்டு; இளைஞன் கைது
வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மானிப்பாய் பகுதியில் இளைஞர் ஒருவர் வாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞர் நேற்று முன்தினம் இரவு யாழ். பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 19 வயதுடையவர் எனவும், குறித்த நபர் கைது செய்யப்பட்ட போது அவரது வீட்டில் இருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
யாழில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்பட்ட குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழில் அண்மையில் கைதாகிய இளைஞர்களிடம் மேற்கொண்ட விசாரணைத் தகவலை அடுத்தே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, கடந்த மற்றும் அண்மை காலங்களில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான வாள்வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இளைஞர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வாள்வெட்டு; இளைஞன் கைது
Reviewed by NEWMANNAR
on
March 18, 2017
Rating:

No comments:
Post a Comment