வேலைவாய்ப்பு வாக்குறுதியில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை
இன்றைய காலகட்டத்தில் நல்லாட்சியின் பிரதமர், தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதியான பத்தாயிரம் வேலைவாய்ப்பில் ஒரு வீதம் கூட நிறைவேற்றப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சந்திவெளி பறங்கியாமடு பிரதேசத்தில் இளைஞர், யுவதிகளுக்கான ஆங்கிலம், வாழ்க்கைத் தேர்ச்சி மற்றும் அடிப்படைக் கணனி டிப்ளோமா கற்கைநெறிக்கான நிகழ்வை சந்திவெளி பி.எச்.பி. தொழில்நுட்ப பயிற்சி நிலைய கட்டடத்தொகுதியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு வியாழேந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பிராண்டினா நிறுவனத்தின் முகாமையாளர் தினேஷ் சௌந்தரராசா, எஸ்.பிரசன்னா, கிரான் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.விந்தியன், பறங்கியமடு பாடசாலையின் அதிபர் எஸ்.தியாகராசா, பயிற்சிநெறியில் கலந்து கொண்டிருந்த பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு வியாழேந்திரன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பை பொறுத்தவரை வேலையில்லாப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக உள்ளது.
எனவே தொழில்துறை சார்ந்த கற்கைகளை மேற்கொண்டு இளைஞர், யுவதிகள் தங்களுக்கு போதிய தொழிலை தேடிக் கொள்வதற்கு ஆயத்தமாக வேண்டிய நிலைப்பாட்டில் இருக்க வேண் டும்.
சந்திவெளி மற்றும் அண்டிய பிரதேச படித்த இளைஞர், யுவதிகளுக்கு இவ்வாறான ஆங்கில மொழியறிவு மற்றும் தகவல் தொடர்பாடல், தொழில்நுட்ப கற்கை நெறியென்பது முக்கியமானது.
இதனை கருத்தில் கொண்டு அதனை எமது தமிழ் பிரதேசத்தில் மாணவர்களுக்கு வழங்குவதற்கு முன்வந்த அனைத்து நன்கொடை யாளர்களுக்கும் நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
அனைத்து பட்டதாரிகளும் அரச வேலையை எதிர்பார்ப்பது அவர்களின் உரிமை. ஆனால் பல தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.
எதிர்காலத்தில் ஒவ்வொரு வரும் தமக்கான தொழிலை தனி யார் துறைகளிலும் தேர்வு செய்ய வேண்டும்.
அதற்கு இவ்வாறான தொழில் நுட்ப மற்றும் ஆங்கில மொழி அறிவுகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு வாக்குறுதியில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை
Reviewed by NEWMANNAR
on
March 18, 2017
Rating:

No comments:
Post a Comment