அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முள்ளிக்குளம் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது-(படங்கள்)

இலங்கை கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை பயிற்சி முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு தங்களை மீள் குடியேற்றம் செய்ய வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் நேற்று வியாழக்கிழமை (23) காலை ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை தொடர்கின்றது.

நேற்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் முள்ளிக்குளம் பிரதான வீதியில் உள்ள முள்ளிக்களம் கிராமத்திற்குச் செல்லும் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக குறித்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள்,ஆண்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

-இதன் தொடர்ச்சியாக 2 ஆவது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை தொடர்கின்றது.

-நேற்று வியாழக்கிழமை இரவு கடும் குளிர் மத்தியிலும்,விசப்பூச்சிகளின் மத்தியிலும் இரவைக்களித்துள்ளனர்.
-பெண்கள்,ஆண்கள்,சிறுவர்கள், வயோதிபர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை கடற்படையினர் பல்வேறு வகையில் அச்சுரூத்தி வருவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

-குறித்த மக்களின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அருட்தந்தையர்கள்,மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,மன்னார் நகர சபையின் முன்னால் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை காலை முள்ளிக்குளம் பகுதிக்குச் சென்றனர்.

இதன் போதே கடற்படையினர் தம்மை அச்சுரூத்தும் வகையில் செயற்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடற்படையினர் தம்மை தொடர்ச்சியாக புகைப்படம் எடுப்பதாகவும், கருத்துக்களை வழங்குபவர்களுடைய விபரங்களை திரட்டுவதாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.

மேலும் குறித்த போராட்டத்தை உடனடியாக கைவிடாது விட்டால் நீங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என கடற்படை எச்சரிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் தெரிவித்தள்ளனர்.

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்க மாட்டோம்,போக்குவரத்து சேவைகளை இடை நிறுத்துவோம்,மலங்காட்டில் உள்ள மக்களுக்கு வழங்கப்படுகின்ற குடி நீர் வசதியை நிறுத்தவோம் என பல்வேறு வகையிலும் தம்மை அச்சுரூத்துவதாக அந்த மக்கள் கவலை தெரிவித்தனர்.

கடற்படை எவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களை அச்சுரூத்தினாலும்,தொடர்ந்தும் எமது நிலம் மீட்கப்படும் வரை போராடுவோம் என அந்த மக்கள் தெரிவித்தனர்.

மேலும் வியாழக்கிழமை மாலை தமது பகுதிக்கு வந்த முசலி பிரதேசச் செயலாளர் உடனடியாக எங்களை குறித்த போராட்டத்தை கைவிட்டுச் செல்லுமாறு தெரிவித்ததாக அந்த மக்கள் மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனிடம் தெரிவித்தனர்.
மேலும் இன்று வெள்ளிக்கிழமை தமது மதிய உணவை கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்று வருகின்ற இடத்திலேயே சமைத்து உண்டுள்ளனர்.

-எத்தனை நாற்கள் சென்றாலும் தமது உரிமை போராட்டம் தொடரும் என அந்த மக்கள் மேலும் தெரிவித்தனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்த வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் கருத்து தெரிவிக்கையில்,,,

தமது நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களின் போராட்டமானது நியாயமானது.

இரண்டாவது நாளாகவும் தமது போராட்டத்தை அமைதியான முறையில் முன்னெடுத்துள்ளனர்.

கடற்படையினர் தொடர்ச்சியாக தம்மை அச்சுரூத்தும் வகையில் நடந்து கொள்வதாக அந்த மக்கள் முறையிட்டுள்ளனர்.

அமைதியான முறையில் தமது உரிமைக்காக போராடும் மக்களை யார் அச்சுரூத்தினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

பொலிஸார் பலர் அப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கடற்படைக்கு பாதுகாப்பு வழங்குகின்றார்களா? அல்லது மக்களை அச்சுரூத்தும் வகையில் செயற்படுகின்றார்களா?என்பது தெரிய வில்லை.

-கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை பாதுகாக்க வேண்டியது பொலிஸாரின் கடமை.எனவே மக்களின் போராட்டத்திற்கு நாம் தொடர்ந்தும் பல்வேறு வகையில் ஆதரவை வழங்குவோம்.என வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மேலும் தெரிவித்தார்.














மன்னார் முள்ளிக்குளம் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது-(படங்கள்) Reviewed by NEWMANNAR on March 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.