விடத்தல் தீவு கிராம மீனவர் கடலில் உயிரிழப்பு-செல்வம் எம்.பி கண்டனம்- ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பி வைப்பு.(படம்)
கடற்படையினரின் படகு மோதியதில் விடத்தல் தீவு கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கண்டித்தள்ளதோடு,ஜனாதிபதிக்கு இன்று வெள்ளிக்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
-குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மன்னார் விடத்தல்தீவு 7 ஆம் வாட்டாரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தாசன் கில்மன் (வயது-39) என்ற மீனவர் நேற்று வியாழக்கிழமை இரவு கடற்தொழிலுக்குச் சென்ற போது கடற்படையினரின் படகு மோதி குறித்த மீனவர் உயிரிழந்துள்ளார்.
-குறித்த சம்பவமானது குறித்த கிராம மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-குறித்த சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதோடு,பல தடவைகள் விடத்தல் தீவு கடலில் மீனவர்களின் படகுகள் மீது கடற்படையினரின் படகு மோதுவதாக மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.எனவே குறித்த மீனவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம் பெறக்கூடாது.குடும்பத்தலைவரின் உயிரிழப்பானது குடும்பத்திற்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தி அவர்களின் எதிர்காலத்தினை கேள்விக் குறியாக்கியுள்ளது.
அவர்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. ஜனாதிபதி குறித்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
-தொடர்ந்தும் கடற்படையினரின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அப்பகுதி மீனவர்களை பா
விடத்தல் தீவு கிராம மீனவர் கடலில் உயிரிழப்பு-செல்வம் எம்.பி கண்டனம்- ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பி வைப்பு.(படம்)
Reviewed by NEWMANNAR
on
March 24, 2017
Rating:

No comments:
Post a Comment